தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரைப்பட இயக்குநர் அட்லி, தனது மனைவி பிரியா அட்லி மற்றும் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பெருமாள் சன்னதி, சண்முகர் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி, சூரசம்ஹார மூர்த்தி சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘Raaka’ திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக AA22xA6 என்ற working title-ல் குறிப்பிடப்பட்டு வந்த இந்தப் படத்திற்கு தற்போது ‘Raaka’ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என வேண்டிக்கொள்வதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க வந்ததாக இயக்குநர் அட்லி தெரிவித்தார்.அட்லி தனது மனைவி பிரியா மற்றும் குடும்பத்தினருடன் திடீரென கோயிலுக்கு வந்ததை அறிந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரைக் காண ஆர்வத்துடன் திரண்டனர். இதனால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் சிறிது நேரம் உற்சாகமான சூழல் நிலவியது.