Skip to playerSkip to main content
  • 2 days ago
காஞ்சிபுரம்: மனமகிழ் மன்றம் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் ஏசி மதுபான பார்களுக்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.ஆன்மீகம் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாநகர் பகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் ஐந்து நுழைவாயில் பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான ஏசி பார் திறப்பு அதிகரித்து வருகிறது. இதனால் காஞ்சிபுரத்திற்கு வருகை தரும் ஆன்மீக நபர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மதுபான ஏசி பார் அமைப்பதனால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில் நிலையத்திலிருந்து வையாவூர் செல்லும் சாலையில் மூவேந்தர் நகர் பகுதியில் புதிதாக மணமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய ஏசி மதுபான பார் திறக்கப்படுவதாக அப்பகுதியில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதனைச் சுற்றியுள்ள 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிப்படும் நிலை உள்ளது.மேலும் இப்பகுதியில் பிரபல இரண்டு தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. ஆகையால் அப்பகுதி மக்களின் நலன் கருதி புதியதாக அமைய இருக்கும் ஏசி வசதியுடன் கூடிய புதிய மதுபான கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
Comments

Recommended