Skip to playerSkip to main content
  • 2 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே டீக்கடைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர், கொதிக்கும் பாலை கடைக்குள் நின்றவர்கள் மீது ஊற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே மது, கஞ்சா போதையால் கொலை, வழிப்பறி, பாலியல் வன்புனர்வு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கட்டுமாவடி பகுதியில் டீக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆரிப்கான் என்பவர் நேற்று அந்த பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.நேராக அடுப்பு அருகே சென்ற அவர், சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த டீயை ஒரு கோப்பையில் எடுத்து அங்கிருந்தவர்கள் மீது ஊற்ற தொடங்கினார். இதனால் டீக்கடைக்குள் நின்றவர்கள் சிதறி ஓடினர். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவரை பிடித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் ரவி அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Category

🗞
News
Comments

Recommended